தேவர் ஜெயந்தி குரு பூஜைக்கு வரும் பிரதமர் மோடி! – ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:19 IST)
அக்டோபர் இறுதியில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என கூறியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவரும், அரசியல்வாதியுமான அவர் 30 அக்டோபரில் பிறந்து பின்னர் அதேபோல 30 அக்டோபரிலேயே மறைந்தார்.

அவரது பிறப்பு மற்றும் இறப்பு ஒரே நாளில் நடந்த நிலையில் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் அவரது சமூக மக்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடைபெற உள்ளது.

ALSO READ: புதுவையில் தமிழிசை தான் சூப்பர் முதலமைச்சரா? காங்கிரஸ் கேள்வி

இந்த குருபூஜையை ஒட்டி பசும்பொன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வருவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து பசும்பொன்னில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments