Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதிரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி மே மாதம் 6-ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார்.


 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய மே 6-இல் தமிழகம் வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து, மோடி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள YMC மைதாத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற உள்ளதாகவும், பொதுக் கூட்டத்திற்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய ராதாகிருஷ்ணன், திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் ஊழல், மோசமான ஆளுகை போன்றவையால் தமிழக மக்கள் அலுத்து போய் இருப்பதாக கூறினார்.
 
மதுவிலக்கு பற்றி திமுக மற்றும் அதிமுக கட்சிகளால் பேச மட்டும் தான் முடியும், ஆனால் குஜராத் மாநிலத்தில் மதுவை தடை செய்து நிரூபித்துள்ள பாஜக அரசால் மட்டும் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments