கடந்த மார்ச் மாதம் +2 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவுகளை நான்கு இணையதளங்களில் பார்க்கலாம் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. அந்த இணையதளங்கள் இதோ.
http://tnresults.nic.in
http://dge.tn.gov.in
http://dge2.tn.nic.in
மேலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.