Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு தேர்வு குறித்து நாளை முக்கிய ஆலோசனை!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (19:20 IST)
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அரசு உறுதிபட கூறி இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதேபோல் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது 
 
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது அல்லது ஒத்தி வைப்பது குறித்து நாளை தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி முடிவு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments