Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை: மதபோதகர் மற்றும் உறவினர் கைது

Advertiesment
abuse
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (19:22 IST)
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகர் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளதாக  குழந்தை உதவி மையத்திற்குக் கடந்த 12 ஆம் தேதி தகவல் வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ரு மாணவியை மீட்டு அறக்கட்டளையில் தங்கவைத்தனர்.  மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்ததில், ‘’மாணவியின் பெற்றோர் கோனேரியாளையம் பெந்தோகோஸ்தே சபை மதபோதகர் வேலாயுதம் ஸ்டீபன்(35) என்பவரின்  வீட்டில் தங்கியிருந்தபோது,  மதபோதகர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும்,  இதை அப்பாவிடம் கூறியதற்கு யாரிடம் கூறவேண்டாம் என்று கூறியதாகவும், அதன்பின்னர், கடந்த 8 ஆம் தேதி மாமா மகன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதையடுத்து, அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் முடிவெடுத்துள்ளதாக’’ தெரியவந்தது.

தற்போது.  போக்சோ சட்டத்தின் கீழ் வேலாயுதம் ஸ்டீபன் , மாணவியின் தந்தை மாமா மகன் ஆகிய 3 பேரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்களைத் திரட்டி அமமுக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் - டிடிவி. தினகரன்