Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை....

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:17 IST)
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பிளஸ்1   மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.  இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்ககவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பிவிட்டி,பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியை அடைந்தனர். பின்னர், போலிஸில் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments