Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ராஜா அவர்களே! என் படத்தையும் கொஞ்சம் புரமோஷன் செய்யுங்கள்: சினிஷ்

Advertiesment
எச்.ராஜா அவர்களே! என் படத்தையும் கொஞ்சம் புரமோஷன் செய்யுங்கள்: சினிஷ்
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:37 IST)
மத்தியில் ஆளும் கட்சிக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் அனைத்து துறையினர்கள் மத்தியிலும் ஒரு பயம் இருக்கும். குறிப்பாக மத்திய ஆட்சியாளர்களை திரையுலகம் ஒரு மரியாதையுடன் தான் பார்க்கும். ஆனால் பாஜக தமிழக தலைவர்களின் கோமாளித்தனமான நடவடிக்கைகளால் நேற்று படம் இயக்க வந்த இயக்குனர்கள் கூட டுவிட்டரில் மத்திய அரசையும், அரசியல்வாதிகளையும் கலாய்த்து வருகின்றனர்.



 
 
அந்த வகையில் ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' என்ற படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் சினிஷ் தனது டுவிட்டரில் ,'எச் ராஜா அவர்களே! நான் பலூன் என்ற படத்தை இயக்கி வைத்துள்ளேன். என்னிடம் படத்தை புரமோஷன் செய்ய காசில்லை. கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யுங்க, என்று பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்திற்கு பாஜகவினர் இலவச புரமோஷன் செய்தது அனைவரும் அறிந்ததே
 
கமல்ஹாசன் முதல் மயில்சாமி வரை பாஜக தலைவர்களை சர்வ சாதாரணமாக கேலியும் கிண்டலும் எதிர்ப்பும் தெரிவித்து வருவது பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓசி பயணம் செய்தால் போலீசாருக்கும் அபராதம்: ரயில்வேதுறை எச்சரிக்கை