Publish Date: Mon, 14 Aug 2023 (13:07 IST)
Updated Date: Mon, 14 Aug 2023 (13:10 IST)
நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இன மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திநிலையில் படுகாயம் அடைந்த மாணவன் தற்போது நெல்லை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாணவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை சென்றனர்.
மருத்துவர்கள் அந்த மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை தொடர்பான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த மாணவன் படிப்படியாக உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.