Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடை எதிரொலி: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (15:34 IST)
தமிழகத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருசில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மக்களும் சுற்றுச்சூழலின் நலனை கருதி மஞ்சப்பைக்கு மாற தயாராக உள்ளனர்.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தடைக்கு இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் விற்பனை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசு தடை விதித்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடன் சுமையில் இருப்பதால் 5 ஆண்டுகளுக்கு தடையை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கூ தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments