Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கூட்டணியில் கமல், ரஜினி: முதல்வரின் அதிரடி பதில்

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (15:25 IST)
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு பின்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் சேரும் அரசியல் கட்சிகள் எவை எவை என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் கமல், ரஜினி கட்சி சேருமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

ராகுல் காந்தியை சமீபத்தில் கமல் சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேர வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்து ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை செய்தே முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும், இந்த தேர்தலில் அவரது பங்கு பெரிதாக இருக்காது என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தை பொருத்தவரை மூன்றாவது அணி என்பது என்றுமே பலமாக இருந்ததில்லை என்பதால் மீண்டும் ஒருமுறை மூன்றாவது அணி அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments