Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஜவுளி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாரா பியூஷ் மனுஷ்?

Advertiesment
பிரபல ஜவுளி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாரா பியூஷ் மனுஷ்?
, வெள்ளி, 8 ஜூன் 2018 (16:29 IST)
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் பகுதியில் உள்ள பல நீர்நிலைகளை தூர்வாரி நீராதரங்களை பாதுகாத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு இவரை நேரில் சந்தித்து இவருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்ட ஒரு ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பணம் பெற்றதாக பியூஷ் மனுஷ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளி நிறுவனம் சமீபத்தில் தங்களது கடையை மறைப்பதாக கூறி ஒரு மரத்தை வெட்டியதாகவும், இந்த மரத்தை வெட்டியது குறித்து பியூஷ் மனுஷ் அந்த நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சத்திற்கான காசோலையை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பியூஷ் மனுஷ் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.7 லட்சம் செக் பெற்றது உண்மை என்றும், ஆனால் அந்த செக்கை தான் கேன்சல் செய்துவிட்டதாகவும் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவில்லை என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் மரம் வெட்டியதாக  ஜவுளி நிறுவனத்தை மிரட்டி 7  லட்சம்  ரூபாய் பணம் பறித்ததாக கூறி, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ்" மீது வழக்கறிஞர் மணிகண்டன்,  பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அந்த ஜவுளி நிறுவனம் இதுவரை புகார் தெரிவிக்காத நிலையில் இவர்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும் - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்