Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்! – நடுகடலில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (10:20 IST)
வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவமும் நடந்து வருகிறது.

வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் விசைப்படகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை சரமாரியாக ஆயுதங்கள் கொண்டு தாக்கியதுடன் மீனவர்களின் மீன்வலை, செல்போன், திசைக்காட்டி உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments