சசிகலா ஆதரவாலர் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸார் விசாரணை

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (07:38 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா ஆதரவாளர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக அதிமுகவை சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜா என்பவர் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருடைய தார் பிளான்ட் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் காரில் இருந்து முழுமையாக சேதம் அடைந்ததாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது 
 
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக வின்சன்ட் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் அவர் திடீரென கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது நிறுவனத்தில் வெடிகுண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சசிகலா ஆடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவரது ஆதரவாளர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments