வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை தள்ளி வைத்தது. இங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும் போட்டியிடுகின்றனர்.
23-ஆம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடத்தப்படுவதால் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளப்பட்டியில் உள்ள அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் தேர்தல் அலுவலகத்தில் மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
23-ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/webdunia-news-avalable-in-app-116021500055_1.html