Publish Date: Sat, 16 Apr 2022 (08:59 IST)
Updated Date: Sat, 16 Apr 2022 (09:00 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 9 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று 10வது நாளாக மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110 ரூபாயும் டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் கடந்த 9 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை. அதேபோல் இன்றும் உயரவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது