Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.35 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (07:57 IST)
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35 உயர்ந்துள்ளதை அடுத்து அந் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் இலங்கை போல் அந்நாடும் திவால் ஆகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35 உயர்ந்து என்ற 249.80 விலையிலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்து 262.80 என்ற விலையிலும் விற்பனை ஆகிவிடுகிறது.
 
பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் நிலையில் அந்நாட்டின் நிதி அமைச்சர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 
 
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 எனவும் சென்னையில் இருந்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments