பகிரங்க மன்னிப்பு கேட்டார் பீட்டா ராதாராஜன்: ஆனாலும்?...
பகிரங்க மன்னிப்பு கேட்டார் பீட்டா ராதாராஜன்: ஆனாலும்?...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களின் தன்னெழுச்சியால் மிகப்பெரிய போரட்டாம் வெடித்தது. ஆனால் அது அறப்போராட்டமாக உலகமே போற்றும் அளவுக்கு நடந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் வானொலியில் பேட்டியளித்த பீட்டா அமைப்பை சேர்ந்த ராதாராஜன் என்பவர் மக்களின் இந்த போராட்டத்தை இலவச உடலுறவுக்கு கூட கூட்டம் கூடும் என ஒப்பிட்டு பேசி கொச்சைப்படுத்தினார்.
இதனால் சமூக வலைதளங்களில் ராதாராஜனை கடுமையாக விமர்சித்தனர் போராட்டக்காரர்கள். அவருக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டது. அவரது வீடு முற்றுகையிடப்பட்டு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழகம் முழுவதும் அவரது இந்த கருத்து பரவி பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நன்றி: Crazy News
இந்நிலையில் தற்போது ராதாராஜன் தன்னுடைய கருத்துக்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னுடைய கருத்து சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் என எதிர்பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் இந்த கருத்து உண்மையாகவே என் மனதில் உள்ள ஜனநாயகத்துக்கும், நீதிமன்றத்துக்கும் எதிரான கருத்து தான் என கூறியுள்ளார்.