Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் - தினகரனுக்கு அனுமதி மறுப்பு

Advertiesment
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் - தினகரனுக்கு அனுமதி மறுப்பு
, திங்கள், 11 செப்டம்பர் 2017 (15:24 IST)
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


 

 
நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் துவங்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி, டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. நீட் தேர்வு விலக்கு கோரி பொதுக்கூட்டம் நடைபெறும் என தினகரன் அறிவித்திருந்தார். 
 
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு நகராட்சி அனுமதி அளிக்க முடியாது என இன்று அறிவித்துள்ளது. அந்த தேதியில் அங்கு வேறு ஒரு கூட்டம் நடைபெறுவதால் அனுமதி தரவில்லை எனக் காரணம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் அணி புகழேந்தி “நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டு, அனுமதி பெற்று செப்.16ம் தேதி கூட்டம் கண்டிப்பாக நடைபெறும்” என அவர் கூறினார்.
 
மேலும், சசிகலாவால் பதவியில் அமர வைக்கப்பட்டவர்கள் தங்களை பழி வாங்குவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றும் பெற்றோர்: அதிர்ச்சி வீடியோ!