Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

Advertiesment
சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

Mahendran

, சனி, 9 நவம்பர் 2024 (15:07 IST)
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஒன்றான ரிப்பன் மாளிகை தற்போது மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த மாளிகையை மக்கள் சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின்படி பொதுமக்கள் ரிப்பன் மாளிகை சுற்றி பார்க்க விரும்பினால், [email protected] எம்ற  இமெயில் முகவரி அல்லது 9445190856   என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வாயிலாக அனுமதி பெறலாம் என்றும், ரிப்பன் மாளிகையின் வரலாறு, அதன் கட்டுமானம், மாநகராட்சி செயல்படும் முறை ஆகியவையும் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகை கடந்த 1896 ஆம் ஆண்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும், 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 7.50 லட்சம் ரூபாய் லோகநாத முதலியார் என்பவர் கொடுத்துள்ளார்.

ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயர் இந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்டது என்பதும், கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!