Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக சின்னம், கொடி பயன்படுத்த நிரந்தர தடை.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு..!!

Advertiesment
அதிமுக சின்னம், கொடி பயன்படுத்த நிரந்தர தடை.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு..!!

Senthil Velan

, திங்கள், 18 மார்ச் 2024 (14:56 IST)
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி,  அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
 
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை,  அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
 
பின்னர் இந்த வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களும்,  மார்ச் 12ஆம் தேதி முடிவடைந்த நிலையில்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
முன்னதாக அதிமுக கட்சி கொடி, சின்னம் ஆகியவை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் - டிடிவி.தினகரன்