முதல்வரை திடீரென சந்தித்த திமுக ஆதரவு எம்பி
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே
இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் அவர் திமுக எம்பிஆகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் திடீரென இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார். பெரம்பலூர் தொகுதியின் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அவர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது
எம்பியாக இருக்கும் ஒருவர் தனது தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டிய நிலையில் திடீரென முதல்வரை சந்தித்து மனு அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரிவேந்தரின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் இது குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் முதல்வரை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது