Publish Date: Tue, 11 Jan 2022 (01:12 IST)
Updated Date: Tue, 11 Jan 2022 (01:14 IST)
இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரொனா பரவும் நிலையில், தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அதில் மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையயில் உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கான மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.