சென்னையில் மீன் வாங்க குவிந்த கூட்டம்: இனி மீனே கிடைக்காதா?
இனிமேல் மீனே கிடைக்காது என்பது போல் மீன் உணவு இனிமேல் சாப்பிடவே முடியாது என்பது போல் சென்னையில் மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிந்த கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாளை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதை அடுத்து இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக குறிப்பாக காய்கறி மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்
இந்த நிலையில் சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டம் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசைவ பிரியர்களின் இந்த கூட்டத்தில் ஏராளமானோர் மீன் மார்க்கெட் தான் சென்று உள்ளனர் என்பதும் அவர்களின் பெரும்பாலும் முகக் கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை பயன்படுத்தாமல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் மற்றும் இறைச்சி வாங்க வந்த மக்கள் கூட்டம் குவிந்ததை அவர்களை கட்டுப்படுத்த மீன் மார்க்கெட்டில் நுழையும் இட்த்தில் தடுப்புகளை போலீசார் அமைத்தனர் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினாலும் அதனை பெரும்பாலானோர் கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை காசிமேடு மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் மற்றும் இறைச்சிகள் வாங்க கூட்டம் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது