ஹெல்மெட் அணிய நாங்க ரெடி..! தரமான சாலை அமைத்துத் தர நீங்க ரெடியா? பொதுமக்கள் கேள்வி

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (11:48 IST)
இரு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதையடுத்து  ஹெல்மெட் அணிய நாங்க ரெடி..! தரமான சாலை அமைத்துத் தர நீங்க ரெடியா? என சமூகவலைதளத்தில் பொதுமக்கள் பலர் அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறுவோர் தண்டனைக்கு ஆளாக்கப்படுவர் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை போலீஸார் பிடித்து அபராதம் வசூலித்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் பின்னால் செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி ஹெல்மெட் அணியாதோரை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதனால் கடுப்பான மதுரை மக்கள் சிலர் ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி, தரமான சாலைகள் அமைத்து தர நீங்கள் ரெடியா? சாலைகளில் குண்டு, குழிகளை அடைக்க, மக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மனைவி சொன்ன வார்த்தை! துள்ளிக்குதித்து கத்திய சென்ட்ராயன்!