Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜா விவகாரத்தில் பின் வாங்கினாரா வைரமுத்து.? தன் குரலை தணித்து கொள்கிறேன் என ட்விட்..!

vairamuthu

Senthil Velan

, சனி, 4 மே 2024 (10:59 IST)
மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்றார். மேலும் சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று வைரமுத்து பேசியிருந்தார்.
 
வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்தநிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
 
கங்கை அமரனின் விமர்சனத்திற்கு வைரமுத்து பதில் எதுவும் கொடுக்கவில்லை. இந்த கருத்து மோதல்களுக்கு இடையே வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும். 
 
புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். 
 
வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். 
 
மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

 
இதன்மூலம், இளையராஜா - வைரமுத்து ஆகியோருக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு விவகாரத்தின் தனக்காக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாகவும் விளக்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ.40 மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி..!