Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுமக்கள் கையில் வந்த புது நோட்டு....

பொதுமக்கள் கையில் வந்த புது நோட்டு....

பொதுமக்கள் கையில் வந்த புது நோட்டு....
, வியாழன், 10 நவம்பர் 2016 (10:49 IST)
ஏற்கனவே மக்கள் வசம் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார்.


 

 
மேலும், அந்த நோட்டுகளை, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய நோட்டுகளை வாங்குவதற்காக இன்று தமிழகம் முழுவதும், இன்று அதிகாலை முதலே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.
 
ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால், நீண்ட பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேபோல், புதிய பணத்தை பெறுவதற்கு விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. 
 
அந்த விண்ணப்பதை பூர்த்தி செய்து மக்கள் புதிய நோட்டுகளை பெற்று வருகிறார்கள். 4 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் ரூ. 1000 மட்டும் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.  புதிய 2000 ரூபாய் மற்றும் பழைய 100,50,20 ரூபாய் நோட்டுகளும் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல் 4000 ரூபாய்க்கு மேல் மாற்ற நினைப்பவர்கள், தங்களின் கணக்கு உள்ள வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
 
புதிய 2000 ரூபாய் நோட்டுகளின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில் மங்கள்யான் செயற்கைக் கோளின் உருவமும் அச்சிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி?: கேள்விகளை தொடுத்த வக்கீல்!