Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்த உத்தரவு!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (14:52 IST)
சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
 
நேற்று முன் தினம் அமலுக்கு வந்த இந்த தளர்வின் மூலம் ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸூக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் சென்னைக்கு வர விண்ணப்பத்தவர்கள் மட்டும் 11,500 பேர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் சென்னையில் குறைய தொடங்கியுள்ள நிலையில் இபாஸ் எளிமையாக்கப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரிப்த்ததோடு சுங்கச்சாவடிகள் கூட்டமாக காணப்படுகின்றன. 
 
இந்நிலையில் சென்னையில் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று அதிகரிக்க கூடாது என்பதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments