Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீர் வந்தும் ஆடி பெருக்கு கொண்டாட முடியலையே! – வருத்தத்தில் மக்கள்!

தண்ணீர் வந்தும் ஆடி பெருக்கு கொண்டாட முடியலையே! – வருத்தத்தில் மக்கள்!
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (09:11 IST)
தமிழக மக்களின் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு நாளான இன்று முழுமுடக்கம் அமலில் உள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழர்களின் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி 18ம் திகதி அன்று நடைபெறும் இந்த விழா ஆற்றில் தண்ணீர் வரத்தை கொண்டாடும் விதமாகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வாகவும் உள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட காலத்தில் காவிரி ஆற்றில் நீர் திறப்பு நடக்காததால் சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு நாட்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் ஆறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

ஆனால் கொரோனா காரணமாக ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அமலில் இருப்பதால் இன்று ஆறுகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள சிலர் மட்டுமே ஆறுகளில் வழக்கமான சம்பிரதாயங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமுடக்கம் என்பதால் பொதுவாக ஆடிப்பெருக்கு நாட்களில் கலைக்கட்டும் விற்பனை தற்போது இல்லாமல் போய்விட்டதாக மார்க்கெட் மற்றும் பூக்கடை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ராணுவத்திலும் சோசியல் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு; சி.ஐ.எஸ்.எஃப் அறிவிப்பு!