பொங்கல் பரிசை வாங்க முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகும் அதனை வாங்கிக் கொள்ளலாம் என உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பொங்கல் பரிசாக பல குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆஃபிஸுக்கு செல்லும் பலரும் வெளியூரில் உள்ள பலரும் சொந்த ஊருக்கு சென்று இன்னும் 1000 ரூபாயை வாங்காமல் உள்ளனர். எங்கே 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 97 சதவீத மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது. வெளியூரில் இருப்பவர்களால் மட்டும் இன்னும் பரிசுப் பொருட்களை வாங்க முடியவில்லை. அப்படி இன்னும் பொங்கல் பரிசை வாங்காதவர்கள் பொங்கல் முடிந்த பின்னரும் தாராளமாக அதனை பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறினார்.