Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களே உஷார்..! தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்.!

மக்களே உஷார்..!  தமிழகத்தில் 3  நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்.!

Senthil Velan

, புதன், 17 ஏப்ரல் 2024 (14:12 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.
 
17.04.2024 : தென் தமிழகம்,   வட  தமிழக   மேற்கு    தொடர்ச்சி        மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
18.04.2024:     தென் தமிழகம்,     வட  தமிழக   மேற்கு    தொடர்ச்சி     மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
19.04.2024: தமிழக உள்  மாவட்டங்களில்  ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கடலோர மாவட்டங்கள்  மற்றும்  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
20.04.2024 முதல் 23.04.2024 வரை: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  
 
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 
 
17.04.2024 முதல் 21.04.2024 வரை: அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச  வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2°  செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த இரண்டு  தினங்களில் சற்றே குறையக்கூடும்.
 
17.04.2024: அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழகத்தில்  ஒருசில  இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 
 
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
 
18.04.2024 மற்றும்  19.04.2024: அதிகபட்ச  வெப்பநிலை  வட தமிழக உள் மாவட்டங்களில்  ஒருசில  இடங்களில் 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
 
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 41° செல்சியஸ் இருக்கக்கூடும்.
 
20.04.2024 மற்றும்  21.04.2024: அதிகபட்ச  வெப்பநிலை   வட தமிழக உள் மாவட்டங்களில்  2°  செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.

ஈரப்பதம்: 
 
17.04.2024 முதல் 19.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.
 
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 
 
18.04.2024 மற்றும்  19.04.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
 
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
 
19.04.2024 மற்றும் 20.04.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: வயநாட்டில் ராகுல் காந்தி வாக்குறுதி!