Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் வெளியே செல்ல அனுமதி

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (10:44 IST)
கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் நிபந்தனையுடன் வெளிய செல்ல அனுமதி. 

 
நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 800 பேர் உள்ளனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். குன்னூர் மார்க்கெட் பகுதியில்  மூட்டை சுமப்பவர்கள் தேயிலை மூட்டை  சுமப்பவர்கள் கேஸ் சப்லே செய்பவர்கள் சிவில் சப்லே மூட்டை சுமப்பவர்கள் கட்டுமான பணியில் அதிகமாக உள்ளதால் இவர்கள் வாழ்வாதாரம் கொரோனாவால் முடங்கியது. 
 
மேலும் இப்பகுதியில் 12 குடுப்பங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 14 நாட்களுக்கு  ஊர் முழுவதும் தடைச்செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்டது தற்போது கொரோனாவால் பாதிக்க பட்ட அனைவரும் வீடு திரும்பியதால் தடை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என மக்கள் காந்திபுரம் பள்ளி வலாகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில், தகவல் அறிந்த குன்னூர்  காவல் துறையினர் DSP. சுரேஷ் தலைமையிலும்  நகராட்சி ஆனையாளர் பொருப்பு முருகாநந்தம் தலமையில் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி நிபந்தனைக்கு உட்பட்ட தளர்வுகள் செய்து தரப்படும் என உறுதி அழித்ததால் கூட்டம் கலைந்தது. இப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு குன்னூர் நகராட்சி  மூலம் உணவு பொருட்கள் ஏற்கனவே  வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments