தமிழகத்தில் கோவில்களில் இன்று முதல் மொட்டையடிக்க கட்டணமில்லை என்ற திட்டம் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல கோவில்கள் இயங்கி வரும் நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்தல், மொட்டையடித்தல் மற்றும் நேர்த்திக்கடன் செய்தல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டோக்கன் வழங்கும் முறை உள்ளது.
இந்நிலையில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இனி கோவில்களில் மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் மொட்டையடிக்க கட்டணம் கிடையாது என பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், இலவசமாக மொட்டையடிக்கப்பட்டு வருவதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.