மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுவில் பழுத்த அரசியல்வாதியான பழ கருப்பையா கலந்துகொண்டு பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில் வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை. இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அந்த கட்சியின் முதல் பொதுக்குழு நடைபெற்று அதில் கமல்ஹாசனை நிரந்தர தலைவராக ஏற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக எம் எல் ஏ பழ கருப்பையா தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என சொன்னபோது நான் அவரை கமலோடு கூட்டணி வைக்க்க சொன்னேன். ஆனால் இப்போது அவர் வரவில்லை என அறிவித்துவிட்டார். இப்போது கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் எனக் கூறினார்.
அவர் பேசியது காங்கிரஸைக் கமலின் கட்சியோடு கூட்டணி வைக்க அழைக்கும் விதமாக இருப்பதாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.