Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் புகார் அளிக்கலாம்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (18:33 IST)
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.


 
 
இதன் ஒருகட்டமாக தேர்தல் தினம் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதாவது நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அது தொடர்பாக புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், செல்பேசி நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக, தமிழக தொழிலாளர் ஆய்வாளர் வாசுகி வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் நிறுவனங்களும், திரையரங்குகளும் மூடப்பட வேண்டும்.
 
அனைத்து பணியாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-ன் படி வாக்குப்பதிவு பணியாளர்களுக்கு 16.5.16 அன்று ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களை  9445398740 என்ற கட்டுபாடு அறை எண் மற்றும் il3chennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments