Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் எதிரொலி: திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நீக்கம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (15:30 IST)
பாலியல் புகார் காரணமாக திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஒரு சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் பள்ளிகள் மட்டுமன்றி கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து உள்ள தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் என்பவர் அவரிடம் படித்த மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தமிழ்த் துறையில் பட்ட மேற்படிப்பு படித்த சில மாணவிகள் புகார் அளித்துள்ளார் 
 
இந்த புகாரை அடுத்து கல்லூரி நிர்வாகம் தமிழ் துறை தலைவர் பால்சந்திரமோகனை நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக மாணவிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்