சசிக்கலா ஆயிரம் பேர்கிட்ட பேசுனாலும் கவலையில்ல..! – கூலாக சொன்ன எடப்பாடி பழனிசாமி!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (13:56 IST)
அதிமுக தொண்டர்களிடம் சசிக்கலா தொடர்ந்து பேசி வருவது குறித்து கவலைபட தேவையில்லை என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். இதனால் சசிக்கலாவுடன் பேசி வரும் சிலர் சமீப காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி “சசிக்கலா 10 பேரிடம் அல்ல.. ஆயிரம் பேரிடம் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அந்த அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments