தமிழகத்தில் 10வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.31 மணியளவில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தார தேவி வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று பிரேம சுதா, சிவக்குமார் ஆகிய இருவர் முதலிடம் பிடித்துள்ளனர்.
498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 93.6% ஆகும். இது ஆண்டை விட கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது.
இந்தாண்டு மொத்தம் 10 லட்சம் 11 ஆயிரத்து 919 பேர் தேர்வை எழுதினர். இவர்களில் மாணவர்கள் 5,07,507 பேர், மாணவிகள் 5,04,412 பேர். இவர்களில் 93.6% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 91.3% ; பெண்கள் 95.9%. வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.5% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 91.3% அதிகரித்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு :
வருவாய் மாவட்டம் |
சதவீதம் |
கன்னியாகுமரி |
98.17 |
திருநெல்வேலி |
95.3 |
தூத்துக்குடி |
96.93 |
ராமநாதபுரம் |
97.1 |
சிவகங்கை |
96.66 |
விருதுநகர் |
97.81 |
தேனி |
96.57 |
மதுரை |
95.68 |
திண்டுக்கல் |
92.57 |
ஊட்டி |
93.25 |
திருப்பூர் |
95.62 |
கோயம்புத்தூர் |
96.22 |
ஈரோடு |
98.48 |
சேலம் |
94.21 |
நாமக்கல் |
96 |
கிருஷ்ணகிரி |
95.05 |
தருமபுரி |
94.77 |
புதுக்கோட்டை |
94.46 |
கரூர் |
96.67 |
அரியலூர் |
92.52 |
பெரம்பலூர் |
96.52 |
திருச்சி |
95.92 |
நாகப்பட்டினம் |
89.43 |
திருவாரூர் |
89.33 |
தஞ்சாவூர் |
95.39 |
புதுச்சேரி |
92.42 |
விழுப்புரம் |
88.07 |
கடலூர் |
89.13 |
திருவண்ணாமலை |
89.03 |
வேலூர் |
86.49 |
காஞ்சிபுரம் |
92.77 |
திருவள்ளூர் |
90.84 |
சென்னை |
94.25 |