Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 தொகுதிகளில் திமுக, பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அதிமுகவுக்கு 0 என கருத்துக்கணிப்பு..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (07:26 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்த நிலையில் இறுதி கட்ட கருத்துக்கணிப்பு குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் தந்தி டிவி எடுத்த கருத்துக்கணிப்பில் 40 தொகுதிகளில் எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்றும் மீதமுள்ள ஐந்து தொகுதிகள் இழுபறியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட இல்லை என்று ஜீரோ என குறிப்பிட்டுள்ளது தான் அதிமுக கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பாஜக கூட்டணிக்கு கிடைத்த ஒரு தொகுதி கூட புதுச்சேரி என்று குறிப்பிட்டுள்ள தந்தி டிவி இழுபறியாக இருக்கும் ஐந்து தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இழுபறி தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்தால் திமுக 34 பாஜக , பாஜக 6,  அதிமுக 0 என்ற நிலை தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் இனி தமிழக அரசியல் களம் திமுக மற்றும் பாஜக என்பதை நோக்கி நகர்வதாக இந்த தேர்தலில் முடிவு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments