Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

Prasanth Karthick
புதன், 5 மார்ச் 2025 (11:36 IST)

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு பணிகளை துவங்க உள்ள நிலையில் இதனால் தென் மாநிலங்களின் தொகுதிகளின் பங்களிப்பு குறையும் என அஞ்சப்படுகிறது. 

 

இந்நிலையில் இன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

 

அப்போது பேசிய அவர் “ம்க்கள் தொகை கட்டுப்பாட்டை விழிப்பாக செயல்படுத்தியதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதை ஏற்க முடியாது. வரும் 2026ல் மேற்கொள்ள உள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகள் ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும். தென் மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments