Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளை அடித்துக் கொன்ற பெற்றோர் : அதிரவைக்கும் சம்பவம்

Advertiesment
மகளை அடித்துக் கொன்ற பெற்றோர் : அதிரவைக்கும் சம்பவம்
, செவ்வாய், 9 ஜூலை 2019 (20:36 IST)
சிவகங்கை மாவட்டம் அருகேயுள்ள  ராமலிங்கபுரம் என்ற பகுதியில் வசித்து  வந்தவர் கைலாஷ் ( 37). இவர் அப்பகுதியிலெயே ஒரு  பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி   லீலாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா(13) மற்றும்  சுகிர்தா(7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா ஆழ்வார்குறிச்சியில் உள்ள பள்ளியிலும், சுகிர்தா பெற்றோருடன் தங்கி சிவகங்கையில் உள்ள பள்ளியிலும் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதனால் இருவருக்கும்  நேற்று  இரவில்   தகராறு ஏற்பட்டது.
 
இதில் கோபம் அடைந்த கைலாஷ் தனது மற்றும் மகளை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இதில் படுகாயமடைந்த  சுகிர்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  அதிர்ச்சியடைந்த தம்பதி கொலையை மறைக்கவும், இதுகுறித்து வெளியில் தகவல் தெரியாமல் இருக்கமுடிவு செய்தனர். 
 
பின்னர் யாராவது கேட்டால் சுகிர்தா மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக பொய்யான தகவலைக் கூறிவந்துள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து இறுதிச் சடங்கு செய்ய ஆயத்தமாகினர். அப்போது உள்ளூரில் உள்ளவர்கள் மூலம் அங்குள்ள  போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
 
பின்னர் போலீஸார், உயிரிழ்ந்த சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
பெற்ற மகளை தாய் மகளே படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் மூழ்கியவர்களை காப்பாற்றிய ’11 வயது சிறுவன் ’ : வைரல் தகவல்