Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’திருமணம் ஆனாலும் குழந்தை பெறக் கூடாது’ - ஈஷா கட்டாயப்படுத்துவதாக அடுத்த புகார்

’திருமணம் ஆனாலும் குழந்தை பெறக் கூடாது’ - ஈஷா கட்டாயப்படுத்துவதாக அடுத்த புகார்
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (18:25 IST)
திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என ஈஷா கட்டாயப்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து தங்களது மகளை மீட்க வேண்டும் என்று புதிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
வலுக்கட்டாயமாக பிரம்மச்சார்யம்:
 
பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர். அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அப்பெண்களின் தாயார் சத்யவதி, ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
 
அனுமதியின்றி கட்டிடம்:
 
இதுதவிர, ஈஷா யோகா மையத்தில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் சதுர அடி கட்டிடங்கள் கட்டிட அனுமதியின்றி விதிமுறைகளை கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள் வெளிக் கொண்டு வந்தனர்.
 
மேலும், இந்த யோகா மையம் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், யானை வழித்தடங்களை மறித்து கட்டிடங்களை எழுப்பி உள்ளதாகவும் வன ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
 
சுடுகாடு ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு:
 
சுற்றுவட்டார நிலங்களை விலைக்கு வாங்கியுள்ள ஈஷா யோகா மையம் தாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
யோகியா? துறவியா?:
 
‘ஜக்கி வாசுதேவ், ‘சத்குரு’ என்று தன்னை அழைத்துக்கொள்கிறார்; ஆனால் ‘சத்குரு’ என்று சொல்வதற்கு ஏற்றபடி ஜக்கிவாசுதேவின் நடவடிக்கைகள் இல்லை; சாஸ்திர அனுபவங்கள் எதுவும் இல்லாமல் அவர் பேசிவருகிறார்.
 
‘ஜக்கி வாசுதேவ், தான் யோகியா அல்லது துறவியா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று ‘யோகா குரு’ தங்கராஜ் சுவாமிகள் கேள்வி எழுப்பி இருந்தார்.
 
அடுத்தக் குற்றச்சாட்டு:
 
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தண்டபானி, வசந்தா தம்பதி.
 
இவர்கள் தங்களது மகள் அபர்ணாவை கோவை ஈஷா யோகா மையத்தினர் மூளைச்சலவை செய்து இருப்பதாகவும், அந்த மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்கள், ’பெங்களுரில் ஐபிஎம் நிறுவனத்தில் அபர்ணா பணியாற்றி வந்த போது ஈஷா யோகா குறித்து அறிந்து கொண்டு அந்த மையத்துடன் தொடர்பில் இருந்தார்.
 
பின்னர், அபர்ணா தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததார். திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த அபர்ணா, யோகா பயிற்சிக்கு சென்ற போது மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டார்.
 
பின்னர் அபர்ணாவை ஆசிரமத்தில் தங்க கூறினார்கள். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என ஈஷா திருமண மையத்தினர் கூறியுள்ளனர். தனது மகளை மீட்டு தருவதுடன் யோகா மையத்தில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பெண்களையும் மீட்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
 
ஈஷா யோகா மையத்தின் அடுத்தடுத்து புகார்கள் எழுந்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

250 ரூபாய்க்கு 10GB 4ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்