Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரண்ட்சர்க்கிள் இதழ், #GadgetFreeHour பிரச்சாரத்தின் 4வது பதிப்பு அறிமுகம்

ramco cement
, வியாழன், 17 நவம்பர் 2022 (19:10 IST)
குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், பேரண்ட்சர்க்கிள் இதழ்,  #GadgetFreeHour பிரச்சாரத்தின் 4வது பதிப்பை அறிமுகம் செய்கிறது:
 
சுருக்கமாக:
 
பேரண்ட்சர்க்கிள் முதன்முதலாக 2019 இல் #GadgetFreeHour பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், அனைத்து கேட்ஜெட்களையும் அணைத்துவிட்டு, குழந்தைகள் தினமான நவம்பர் 14  அன்று தங்கள் குழந்தைகளுடன் குறைந்தது ஒரு மணிநேரம் செலவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்து பெரும் வெற்றியைப் பெற்றது   இந்த ஆண்டு, #GadgetFreeHour நவம்பர் 20, அன்று நடைபெறுகிறது. அதேபோல சமூக ஊடகங்களில் #GadgetFreeHour பிரச்சாரம் 50 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான தாக்கத்தைப் பெற்றதன் மூலம் தன் வேகத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. விவரங்களுக்கு மேற்கொண்டு படிக்கவும்…
 
நேர்மறையான உறவுகள் மற்றும் நெருங்கியவர்களுடன் இருப்பதன்மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கின்றன. உறவுகளை உருவாக்குவதற்கு, மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்ற கேட்ஜெட்களின் குறுக்கீடுகள் இல்லாமல்,  நம் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதும் அவர்களுடன் விளையாட்டில் ஈடுபடுவது, அர்த்தமுள்ள தகவல் பரிமாற்றம் செய்வதும்தான் அவசியம்.  ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் கேட்ஜெட் இல்லாத இணைப்பு நேரத்தை ஒவ்வொரு குடும்பத்தின் வழக்கமான பகுதியாக மாறவேண்டும். 
 
நவம்பர் 20 (உலக குழந்தைகள் தினம்), 2022 அன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை #GadgetFreeHour சமூக முன் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையுமாறு பேரண்ட்சர்க்கிள் கேட்டுக்கொள்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில், குடும்பங்கள் தங்கள் கேட்ஜெட்களை டிஸ்கனெக்ட் செய்து, விளையாடுவது, பேசுவது, சாப்பிடுவது மற்றும் ஒன்றாகச் சிரிப்பது, ஒருவருக்கொருவர்  மகிழ்ச்சியை வேடிக்கையான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள் – 
 
புதுச்சேரி அரசும் #GadgetFreeHour முயற்சியில் நம்முடன் கைகோர்த்திருக்கிறது. குறிப்பாக, இதுகுறித்த விழிப்புணர்வை  புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப்  பள்ளிகளுக்கும் கொண்டுசெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
 
சேர்ந்து விளையாடுவதும் ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடுவதும் சக்திவாய்ந்த நினைவுகளை உருவாக்குகிறது. மேலும், சில சமயங்களில் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களையும் நீங்கள் இதிலிருந்து பெறுவீர்கள். இந்த ஆண்டு, குடும்பப் பிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் கேட்ஜெட்டுகள் இல்லாத செயல்களில் நேரத்தைச் செலவிடுவதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், குடும்பங்களுக்கான பல ஆக்டிவிட்டிஸ் மற்றும் போட்டிகளை நாங்கள் நடத்தி வருகிறோம்.
 
குடும்பங்கள் நேருக்கு நேர் இணையாதபோது, அவர்களால் ஒருவருக்கொருவர் தங்கு தடையின்றி நேரத்தைச் செலவிட முடியாமல் போகும்போது, ஒருவருக்கொருவர் பேசி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், குடும்பத்துக்கான இடத்தை கேட்ஜெட்டுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கும். அதனால்தான் குடும்பங்கள் வழக்கமாக கேட்ஜெட்களிலிருந்து டிஸ்கனெக்ட் செய்து ஒருவருக்கொருவர் மீண்டும் இணைய வேண்டியது அவசியமாகிறது.
 
#GadgetFreeHour ஏன் காலத்தின் தேவை என்பதைப் பற்றி, பேரண்ட்சர்க்கிள் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நளினா ராமலட்சுமி பேசுகையில், "உங்கள் குழந்தைகளுடன் நம்பகமான உறவை வளர்ப்பதே வெற்றிகரமான குழந்தை வளர்ப்புக்கு முக்கியமானது. இது நடக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச்  செலவிட வேண்டும்.  அவர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களுடன் அரட்டை அடிப்பது அல்லது விளையாடுவது மற்றும் வேடிக்கை பார்ப்பது, இனிமையான நினைவுகளை உருவாக்குவது. என, இந்தச் சிறப்பு தருணங்களில், கேட்ஜெட்டுகள் மற்றும் மொபைல்கள் உட்பட பிற கவனச்சிதறல்கள் இல்லாமல் குழந்தைகளுடன் இணைவதில் கவனம் செலுத்த வேண்டும். இது எங்களின் #GadgetFreeHour பிரச்சாரத்தின் 4வது ஆண்டாகும், மேலும், இந்தப் பிரச்சாரத்தின் மூலம் குடும்பங்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டும் இல்லாமல், கேட்ஜெட் இல்லா நேரம் என்பதை ஒரு வழக்கமான நடைமுறையில் கொண்டுவர ஊக்குவிப்போம் என்று நம்புகிறோம்." என்று தெரிவித்திருக்கிறார்.
 
  
 
#GadgetFreeHour மேற்கோள்கள்
 
#GadgetFreeHour முயற்சியானது பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது, நடிகர்கள், இசைக்கலைஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், கார்ப்பரேட் தலைவர்கள், குழந்தைக் கல்வித் துறை வல்லுநர்கள் என அனைவரும் கேட்ஜெட் இல்லாத நேரம் பெற்றோர்-குழந்தை பந்தத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி பேச முன்வந்திருக்கின்றனர்  அவர்கள் சொல்வது இதோ:
 
“#GadgetFreeHour என்பது திருமதி நளினா ராமலக்ஷ்மி அவர்களால் நிறுவப்பட்ட பேரண்ட்சர்க்கிள் மற்றும் செல்லமே இதழ்களின் தனித்துவமான முயற்சியாகும். மொபைல்கள், ஐபேட்கள், ஐபாட்கள், கேமிங் கேட்ஜெட்டுகள் போன்றவற்றின்  பரவலான பயன்பாட்டின் காரணமாக குழந்தைகளின் கவனம் படிப்பு  மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளிலிருந்து திசை திரும்பியுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட கேட்ஜெட்டுகளுக்கு அடிமையாகிவிட்டனர். பிள்ளைகள், பெற்றோரின்  அறிவுரைகளை சரிவரக் கடைப்பிடிக்காமல் போகும்போது  குடும்பச் சூழல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.  இதன் விளைவாக, குடும்ப உறவுகள் உடைந்து போகின்றன. குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் பெற்றோரும் குழந்தைகளும் டிவி போன்ற கேட்ஜெட்களை ஒதுக்கிவைத்துவிட்டு தினமும் ஒரு மணி நேரமாவது  ஒன்றாக நேரம் செலவிடவேண்டியது இங்கே அவசியமாகிவிட்டது. இதுவே #GadgetFreeHour முன்னெடுப்பின் நோக்கம். இது நீண்ட தூரப் பயணமாக இருந்தாலும்கூட #GadgetFreeHour - 2022 வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
 
ஏ.வி.தர்மகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி, ‘தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் செல்போன் உபயோகித்தால் அபராதம்: கிராமசபையில் கட்டுப்பாடு!