Publish Date: Sat, 15 Oct 2022 (13:17 IST)
Updated Date: Sat, 15 Oct 2022 (13:19 IST)
பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த 13 கிராம பொதுமக்கள் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வந்தனர்
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசு சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.