Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!

Advertiesment
பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!
, ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (07:45 IST)
பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்
பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர் 
 
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கும் முரணாக வகைகள் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தால் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது 
 
மேலும் அவருடன் சேர்ந்து அவருடைய கணவர் உள்பட ஐந்து பேர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுல் நீக்கப்பட்ட ஆறு பேர்களுடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என உடன்பிறப்புகளுக்கு கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13.59 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!