மாணவர்களின் தீவிர போரட்டம்: காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (12:02 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அலங்கா நல்லூரில் கடந்த இருதினங்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். கடும்குளிரையும் கண்டுகொள்ளாமல் உணவு உறக்கமின்றி போராட்ட களத்தில் உள்ளனர். இதையடுத்து தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சென்னை மெரினாவில் நேற்று காலை முதல் மாணவ-மாணவிகள் குவியத்தொடங்கினர். முதல்வர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு  நடத்த உடனடி சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


 

இந்நிலையில்  ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததை அடுத்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக கமிஷனர் ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments