Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீசி, பிளேடால் முகத்தை கிழித்த நர்ஸ்

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (11:56 IST)
காதலித்து திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய தனியார் மருத்துவமனை செவிலியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 


 

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் நர்ஸ் லிதியா (26). அதே பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜெயக்குமார் (30). இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து, லிதியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால், ஜெயக்குமார் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமார், லிதியாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தீர்க்கப்படுவதற்காக காவல் துறையினை லிதியா அணுகியுள்ளார். அப்போது இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த லிதியா, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த விஜயகுமாரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

வண்டி விஜயநகர் பைப்லைனில் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜெயக்குமார் மீது ஆசிட்டை விதியா வீசியுள்ளார். மேலும், ஜெயக்குமாரின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கீறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

படுகாயமடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லிதியாவை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments