Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பிதுரை ஒன்றுமே தெரியாமல் இவ்வளவு நாள் காலத்தை ஓட்டியுள்ளார்: ஓபிஎஸ் கடுமையான விமர்சனம்

Advertiesment
தம்பிதுரை ஒன்றுமே தெரியாமல் இவ்வளவு நாள் காலத்தை ஓட்டியுள்ளார்: ஓபிஎஸ் கடுமையான விமர்சனம்
, வெள்ளி, 3 மார்ச் 2017 (15:45 IST)
பிரதமரை சந்திப்பது குறித்த நடைமுறை கூட தெரியாத தம்பிதுரை இவ்வளவு நாள் எம்.பி. பதவியில் தனது காலத்தை ஓட்டியுள்ளார் என ஓ.பி.எஸ் கடுமையாக விமர்சித்தார். 


 

 
ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
கட்சி, ஆட்சி இரண்டும் காப்பாற்றப்பட நானே முதல்வராக வேண்டும் என சசிகலா என்னிடம் கூறினார். எனவே, முதல்வர் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், சிறிது நாட்களிலேயே, சசிகலாவை முதல்வராக்க தினகரன் விரும்புவதாக, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். மேலும், தம்பிதுரை உள்ளிடவர்களும் அதுபற்றி பேசி என்னை சங்கடத்துக்கு ஆளாக்கினார்கள். எனவே, ராஜினாமா கடிதத்தை அவர்களிடம் கொடுத்தேன். 
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லிக்கு சென்ற பின் அவர் அமைச்சர்களுடன் வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் பிரதமரை சந்திக்கும்போது அவரும் கூட வரலாமா என கேட்டான்? அப்போதும் அவருக்கு அனுமது கிடைக்கவில்லை. பிரதமரை சந்திப்பது குறித்த நடைமுறை கூட தெரியாத தம்பிதுரை இவ்வளவு நாள் எம்.பி. பதவியில் தனது காலத்தை ஓட்டியுள்ளார், என்றார்.
 
இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை கடுமையாக விமர்சித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. எங்களிடம் கூறியது வேறு; சசிகலா நடந்து கொண்டது வேறு - ஓ.பி.எஸ் சீற்றம்