Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சு சாட்டையா? சந்தேகம் இருந்தால் வாருங்கள், அடித்து காட்டுகிறேன்: அண்ணாமலை

Annamalai

Siva

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:27 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சாட்டையால் தன்னை அடித்துக் கொண்ட நிலையில் அந்த சாட்டையை பஞ்சு சாட்டை என்றும் அதில் அடித்தால் வலி இருக்காது என்றும் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, பஞ்சு சாட்டை என்று கூறுபவர்கள் எனது இல்லத்திற்கு வரலாம், அவர் மீது அடித்து சோதனை செய்து பார்க்கலாம், என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14 ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  
 
குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? 
 
இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர். ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. 
 
பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா?
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலை. விவகாரம்! சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - தடையை மீறுமா நாதக?