Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமத்தைத் தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் – இரண்டு பிரபல கட்சிகளை குறிப்பிட்ட ஊடகவியலாளர் !

Advertiesment
காமத்தைத் தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் – இரண்டு பிரபல கட்சிகளை குறிப்பிட்ட ஊடகவியலாளர் !
, வியாழன், 9 ஜனவரி 2020 (15:40 IST)
தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமடைந்திருக்கும் பனிமலர் பன்னீர் செல்வம் சமூகவலைதளங்களில் தரக்குறைவாக பேசும் இரு கட்சியினரை சார்ந்தவர்களை குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் பனிமலர் பன்னீர் செல்வம் நாம் தமிழர் கட்சியினரும் , பாஜகவினரும் காமத்தைத் தவிர வேறு ஒன்றுமே அறியாதவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக பேசும் அவரது பதிவுகளின் பின்னூட்டங்களில் வரும் கமெண்ட்களைக் குறிப்பிட்டு ‘காமத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் சங்கிகளும், தம்பிகளும். எனக்கு வரும் பின்னூட்டங்களே அதற்கு சாட்சி ’ எனக் குறிப்பிட்டு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார்.

அவர் சொன்னது போலவே அவரது அந்த பதிவுக்கு கீழும் பலர் ஆபாசமாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல லட்சங்கள் அபராதம் கட்டிய ஆடம்பர கார் உரிமையாளர் !