Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்.. அமாவாசை காரணமா?

Advertiesment
தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்.. அமாவாசை காரணமா?
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:32 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகள் திடீரென உள்வாங்குவது வழக்கமாக இருந்து வருகிறது என்பதும் திருச்செந்தூரில் அடிக்கடி கடல் உள்வாங்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது தூத்துக்குடியில் திடீர் என இன்று கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி துறைமுகம் சாலையில் சுமார் 40 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளதாகவும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் உள்வாங்கியதால் கரைத்தட்டி நின்றதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து கடல் சார்ந்த நிபுணர்கள் கூறிய போது அமாவாசை காரணமாக கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர்,. 
 
திடீரென்று 40 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தாலும் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என கடல் சார்ந்த நிபுணர்கள் மக்களுக்கு ஆறுதல் அறிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடைக்கானல் குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்.. அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்..!